டெல்லி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்… உற்சாக வரவேற்பு!

 

டெல்லி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்… உற்சாக வரவேற்பு!

பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டு பிரச்னைகளை எடுத்துரைக்க நேரம் கோரியிருந்தார். 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ.கே.எஸ் விஜயன் தெரிவித்திருந்தார். அதன் படி, பிரதமரை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 7.20 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றார்.

டெல்லி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்… உற்சாக வரவேற்பு!

டெல்லி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தையும் திமுக கட்சி அலுவலகத்தையும் பார்வையிடுகிறார். பின்னர், மாலை 5 மணிக்கு மோடியை சந்தித்து தடுப்பூசி தட்டுப்பாடு, நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன், எய்ம்ஸ், ஜி.எஸ்.டி, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசவுள்ளார்.

டெல்லி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்… உற்சாக வரவேற்பு!

முதல்வர் மு.க ஸ்டாலின் வருகையையொட்டி #delhiwelcomesstalin என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. டெல்லி சென்றடைந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. எம்.பி டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதல்வரான பிறகு ஸ்டாலின் முதன்முறையாக டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.