அறிஞர் அண்ணா பிறந்தநாள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

 

அறிஞர் அண்ணா பிறந்தநாள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திராவிட கொள்கைகளை வேரூன்ரா வைத்து தமிழ்நாடாக மாற்றிய புரட்சியாளர் அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சமூகநீதியை மேடைப் பேச்சில் இருந்து கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் விதைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் அவரை வணங்கி போற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அதே போல, மறைந்து அரை நூற்றாண்டு கடந்தும் உன் மைய அச்சில் தான் ஆட்சி சுழல்கிறது. மாநில அரசியல். இரு மொழிக் கொள்கைக்கு இனவழி உரிமைக்கும் நீயே காப்பு. ஆகவே ஏடுகளின் உச்சியில் எழுதுகிறோம் ‘அண்ணா துணை’ என்று பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து. இவ்வாறு சரித்திர நாயகன் அண்ணாவை பலரும் நினைவு கூறுகின்றனர்.

அறிஞர் அண்ணா பிறந்தநாள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

இந்த நிலையில், அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதே போல, சென்னை அண்ணா சாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், திமுக மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.