கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

 

கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த பிறகு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டது. வணிக வளாகங்கள், கோவில்கள், சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள் என ஒவ்வொன்றாக திறக்கப்பட்டது. தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியதால் கடந்த முறை புதிதாக தளர்வுகளின்றி ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கை நீடித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

அதுமட்டுமில்லாமல் கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன் படி சென்னை, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு கடைகளுக்கு நேர்க்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் பாதிப்பு சற்று அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில், அடுத்த வாரம் கூடுதல் தளர்வுகளை வழங்கலாமா அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதில் தலைமை செயளாலர், மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறதா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.