தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம் – சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

 

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம் – சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது. அவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், இனி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என்று அறிவித்தார். குடிசை மாற்று வாரியம் மூலமாக தனித்தனியாக கட்டடங்கள் கட்டப்பட்டாலும் அதன் மீதான பார்வையை மாற்றுவதற்காகவும் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டு வருவதாகவும் அதை குறிக்கும் நோக்கில் பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம் – சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

இதைத்தொடர்ந்து நெல்லை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, தேனி, தென்காசி, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூபாய் 950 கோடி செலவில் 6,000 புதிய குடியிருப்புகளை கட்ட தமிழ்நாடு குடிசை வாரியம் மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் உலக வங்கி நிதியின் கீழ் தமிழ்நாட்டில் 9 இடங்களில் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் 11,497 மனைகளும் 8601 குடியிருப்புகளும் விற்பனைக்கு தயாராக இருப்பதாகவும் விற்பனையாகாத அலகுகளை விற்பதற்கு வருங்காலத்தில் விற்பனைப் பிரிவு உருவாக்கப்படும் என்றும் வீட்டு வசதி வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.