‘5 ஆவது முறையாக’ ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

 

‘5 ஆவது முறையாக’ ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

கொரோனா தடுப்பு பணி குறித்து விளக்கம் அளிக்க முதல்வர் கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்றுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் அரசு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. அதே போல ஒவ்வொரு மாவட்டமாக செல்லும் முதல்வர் அம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளையும் வளர்ச்சித்திட்ட பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். இவ்வாறு மக்களின் நலனுக்காக தமிழக அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆளுநருக்கு தெரிவிப்பது வழக்கம். கொரோனா பாதிப்பு ஆரம்பித்ததில் இருந்து ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என தொடர்ந்து 4 மாதங்களாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி கலந்துரையாடினார்.

‘5 ஆவது முறையாக’ ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

இந்த நிலையில் தற்போது 5ஆவது முறையாக சென்னை ராஜ்பவனில் ஆளுநரை முதல்வர் சந்தித்துள்ளார். ஆளுநருடனான சந்திப்பில், அரசின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க உள்ளதாகவும் 14 ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இச்சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.