6,7 ஆம் தேதிகளில் மதுரை, நெல்லை, தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு செல்கிறார் முதல்வர்!

6,7 ஆம் தேதிகளில் மதுரை, நெல்லை, தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு செல்கிறார் முதல்வர்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 5,875 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டுமே ஒரு லட்சத்து 1951 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால், வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம், மதுரை, தேனி, நெல்லை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தான் கொரோனா வேகமெடுத்து வருகிறது.

6,7 ஆம் தேதிகளில் மதுரை, நெல்லை, தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு செல்கிறார் முதல்வர்!

இதனால் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வரும் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் 4 மாவட்டங்களுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, நெல்லை, தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று அம்மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்யவிருக்கிறார்.