அம்மா உணவகம் போல் ‘அம்மா மினி க்ளினிக்’ அசத்திய முதல்வர்; நெகிழ்ந்த மக்கள்

 

அம்மா உணவகம் போல் ‘அம்மா மினி க்ளினிக்’ அசத்திய முதல்வர்; நெகிழ்ந்த மக்கள்

சுகாதாரத் துறையில் இந்திய அளவில் ஒரு புதிய சாதனை, இந்திய மருத்துவர்கள் சங்கம் பாராட்டிய மினி கிளினிக்குகள் திட்டம் தொடக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக “மினி கிளினிக்” திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 2000 மின் கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது.

அம்மா உணவகம் போல் ‘அம்மா மினி க்ளினிக்’ அசத்திய முதல்வர்; நெகிழ்ந்த மக்கள்

தமிழகத்தில் 1,851 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. 8 கிலோ மீட்டர்களுக்கு ஒரு மருத்துவமனை தற்போது செயல்பட்டு வருகிறது. சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் இடங்களில் ஒரு மருத்துவமனை செயல்படும் நோக்கில் “மினி கிளினிக்” திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக, சென்னை ராயபுரம், வியாசர்பாடி, மைலப்பூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் 200 இடங்களில் மின் கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது. தமிழக முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது.

அம்மா உணவகம் போல் ‘அம்மா மினி க்ளினிக்’ அசத்திய முதல்வர்; நெகிழ்ந்த மக்கள்

இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளரர்களை கொண்டு இந்த மினி கிளினிக்குகள் இயங்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, ஹீமோகுளோபின், சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட வசதிகளும், இ.சி.ஜி கருசி, பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, வெப்பநிலை கண்டறியும் தெர்மாமீட்டர், பேட்டர் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை மருத்துவ உபகரணங்களும் இந்த மினி கிளினிக்கிகுகள் வைக்கப்பட்டுள்ளது. ராயபுரத்தில் மினி கிளினிக்கை திறந்து வைத்த பின் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளதாக தெரிவித்தார்.

அம்மா உணவகம் போல் ‘அம்மா மினி க்ளினிக்’ அசத்திய முதல்வர்; நெகிழ்ந்த மக்கள்

மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை பெறும் வகையில் அம்மா மினி கிளினிக் துவங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். “இது வரலாற்று சாதனை..நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கி தர வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக அரசு இத்திடத்தை செயல்படுத்தி வருகிறது” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அனைத்து தரப்பினரும் பாராட்டி வரும் நிலையில் சுகாதார துறையில் மேலும் ஒரு மைல் கல்லாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணத்தில் உதித்த இந்த மினிகிளினிக்குகள் திட்டத்தை இந்திய மருத்துவகள் சங்கமே பாராட்டியுள்ளது.