11.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,116 கோடி தர ஏற்பாடு : முதல்வர் அறிவிப்பு!

 

11.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,116 கோடி தர ஏற்பாடு : முதல்வர் அறிவிப்பு!

ஜனவரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.1,116 கோடி வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுமார் 11.43 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி நிவாரணம் தரப்படும். 6.81 லட்சம் எக்டேர் பரப்பிலான வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புயல் நிவாரணமாக ஏற்கனவே ரூ.543.10 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மத்தியக் குழு பிப்.3,4,5ல் மீண்டும் பார்வையிடுகிறது என தெரிவித்துள்ளார்.

11.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,116 கோடி தர ஏற்பாடு : முதல்வர் அறிவிப்பு!

தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய 12.3 மீ.மீக்கு பதில் 136.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவைக் காட்டிலும் 1,108 விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தின் டெல்டா, தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இணையவழி வகுப்புகளில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்றும் 9,69,047 மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா கார்டுகள் வீதம் ஏப்ரல் மாதம் வரை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.