டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்… நீதிமன்றத்தில் முறையீடு!

 

டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்… நீதிமன்றத்தில் முறையீடு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. அதன் படி, கடந்த 25ம் தேதி முழு பொதுமுடக்கம் அமலானது. இதனிடையே வணிக வளாகங்கள், ஷோரூம்கள், கோவில்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதிப்பு சற்றும் குறையாததால் அவற்றை மூடுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்… நீதிமன்றத்தில் முறையீடு!

அதன்படி மால்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதில் தப்பியது டாஸ்மாக் மட்டுமே. டாஸ்மாக் மூலமாக அரசுக்கு வருவாய் கிடைப்பதால், டாஸ்மாக்குகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டதே தவிர, மூடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டாஸ்மாக்கில் மதுபிரியர்களின் கூட்டம் தினமும் அலைமோதுவதால் அவற்றை மூட வேண்டுமென்ற கோரிக்கை வெகுவாக எழுந்துள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்… நீதிமன்றத்தில் முறையீடு!

இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென ராம்குமார் ஆதித்தன் என்பவர் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார். அதை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.