கழிவு பொருட்களை பயன்படுத்தி இலகுரக மோட்டார் சைக்கிளை உருவாக்கிய கேரள சிறுவன்….

 

கழிவு பொருட்களை பயன்படுத்தி இலகுரக மோட்டார் சைக்கிளை உருவாக்கிய கேரள சிறுவன்….

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பல்லுறுதி பகுதியை சேர்ந்தவர்கள் டி.ஜே. ஹாசிம் மற்றும் ஹாசீனா தம்பதியனர். இவர்களது பையன் டி.எச். அர்ஷாத். 9ம் வகுப்பு மாணவனான அர்ஷாத் லாக்டவுன் காரணமாக பள்ளி திறக்காததால் தனது தந்தை வைத்துள்ள ஓர்க்ஷாப்புக்கு அடிக்கடி சென்றுள்ளான். அங்கு கிடக்கும் பழைய பொருட்களை வைத்து பைக் உருவாக்க முடிவு செய்தான். இதனையடுத்து சுமார் ஒன்றரை மாதங்கள் போராடி ஒரு புதுமையான மோட்டார் சைக்கிளை உருவாக்கி விட்டான்.

கழிவு பொருட்களை பயன்படுத்தி இலகுரக மோட்டார் சைக்கிளை உருவாக்கிய கேரள சிறுவன்….

அர்ஷாத் உருவாக்கியுள்ள பைக்கில். சீட் மற்றும் ஹேண்டில் இடையே பார் கம்பி போல் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு லிட்டர் எரிபொருள் கொள்ளவு கொண்டது. மற்ற பைக்ககளிலிருந்து வேண்டாம் என்று கழற்றி எறியப்பட்ட டயர்கள், டிஸ்க் பிரேக்குகள்,எல்.இ.டி. லைட்கள், ஹேண்டில் மற்றும் சைக்கிளிலிருந்து கேரியர் மற்றும் சீட் ஆகியவற்றை எடுத்து இந்த மோட்டார் சைக்கிளை சிறுவன் அர்ஷாத் உருவாக்கியுள்ளான். இதற்காக சுமார் ரூ.10 ஆயிரம் செலவில் ஒன்றரை மாத காலத்தில் இந்த இலகுரக மோட்டார் சைக்கிளை அர்ஷாத் உருவாக்கியுள்ளான். இந்த பைக் ஒரு லிட்டருக்கு 50 கி.மீட்டர் வரை செல்லும் என சிறுவன் தெரிவித்துள்ளான்

கழிவு பொருட்களை பயன்படுத்தி இலகுரக மோட்டார் சைக்கிளை உருவாக்கிய கேரள சிறுவன்….

இலகுரக மோட்டார் சைக்கிளை உருவாக்கிய சிறுவன் அர்ஷாத் கூறுகையில், என்னுடைய தந்தையின் ஒர்க்ஷாப்பில் இரும்பு குழாய் மற்றும் மோட்டார் சைக்களின் என்ஜினை பார்த்ததும் முதலில் பைக் உருவாக்க வேண்டும் என விரும்பினேன். முதலில் எனது தந்தை என்னை திட்டினார் ஆனால் பாதி வேலை பணிகள் நடந்து கொண்டிருந்தபோது எனக்கு உதவினார் மற்றும் ஒன்றரை மாதத்தில் பைக்கை உருவாக்கி விட்டேன். பல்வேறு பைக்குகளின் பாகங்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்து டிரோலி தயாரிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார். அர்ஷாத்தின் தந்தை ஹாசிம் கூறுகையில், எனது மகனின் படைப்பால் நான் பெருமிதம் அடைகிறேன். அவன் அதனை பதிவு செய்ய முயற்சி செய்து வருகிறான். அவனது எதிர்கால முயற்சிகளுக்கு நான் ஆதரவு அளிப்பேன் என தெரிவித்தார்.