டிவி ரிப்பேர் ஆனதால் ஆன்லைனில் பாடம் கற்கமுடியவில்லை என தீக்குளித்து பலியான மாணவி ! கேரளாவில் சோகம் !

 

டிவி ரிப்பேர் ஆனதால் ஆன்லைனில் பாடம் கற்கமுடியவில்லை என தீக்குளித்து பலியான மாணவி ! கேரளாவில் சோகம் !

திங்கள்கிழமை தொடங்கிய ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத சோகத்தை தாங்க முடியாமல், பத்தாம் வகுப்பு பெண் மாணவி தன்னை தீ வைத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி மலப்புரத்தில் உள்ள வலஞ்சேரியில் வசித்து வந்தார், சிறுமி படிப்பதில் படு சுட்டி. தனது வீட்டில் தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. அவர்களது மொபைல் போனும் ரீசார்ஜ் செய்யாதால் வேலை செய்யவில்லை.
இதனால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாவில்லை என அந்த சிறுமி சோகமாக இருந்துள்ளார். பின்னர் அவர் காணவில்லை என்று உறவினர்களால் தேடப்பட்டார். பின்னர் அவர்கள் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அந்த 14 வயது சிறுமியின் எரிந்த உடல் மட்டுமே கிடைத்தது.

டிவி ரிப்பேர் ஆனதால் ஆன்லைனில் பாடம் கற்கமுடியவில்லை என தீக்குளித்து பலியான மாணவி ! கேரளாவில் சோகம் !
தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேசிய உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆபிட் உசேன் தங்கல், டிவி அல்லது மொபைல் போன்களுக்கு இல்லாத மாணவர்களுக்கு சரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் இந்த சோகமான சம்பவத்தை தவிர்க்க முடியும். நாங்கள் இந்த பிரச்சனையை கல்வி அதிகாரிகளிடம் எழுப்பினோம், டிவி அல்லது ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு அந்த ஏற்பாடுகள் செய்து தந்திருக்க வேண்டும் என குரல் கொடுத்தோம். அவர் மிகவும் நன்றாக படிக்கும் மாணவி” என்று கூறினார்.

சிறுமியின் தந்தை ஒரு சாதாரண தொழிலாளி, ஊரடங்கு காரணமாக எந்த வேலையும் இல்லை, எனவே அவர்களின் டிவியை சரிசெய்ய பணம் இல்லை.