”சிட்டி ஸ்பீடு” மின்சார ஸ்கூட்டர்கள் -ஹீரோ எலக்ட்ரிக் அறிமுகம்

 

”சிட்டி ஸ்பீடு” மின்சார ஸ்கூட்டர்கள் -ஹீரோ எலக்ட்ரிக் அறிமுகம்

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ”சிட்டி ஸ்பீடு’ என்ற பெயரில் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

”சிட்டி ஸ்பீடு” மின்சார ஸ்கூட்டர்கள் -ஹீரோ எலக்ட்ரிக் அறிமுகம்

ஆப்டிமா -எச்எக்ஸ், என்ஒய்எக்ஸ்-எச்எக்ஸ், மற்றும் போட்டான் – எச்எக்ஸ் ஆகிய பெயரில் மாறுபட்ட ஸ்கூட்டர் மாடல்களை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நகர்புற பகுதிகளில் கூடுதல் திறனுடன் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், சிறந்த வேகத்திறன் மற்றும் மேடு மற்றும் பாலத்தில் ஏறும் போது சிறந்த இழுவை திறனுடன் செயல்படும் என ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

”சிட்டி ஸ்பீடு” மின்சார ஸ்கூட்டர்கள் -ஹீரோ எலக்ட்ரிக் அறிமுகம்

இந்த புதிய மின்சார ஸ்கூட்டர்கள் குறித்து ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சோஹிந்தர் கில் கூறுகையில், ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர்களில் 70 கிலோ மீட்டர் முதல் 200 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என்றார். மேலும் இந்த வண்டிகளின் விலை 57 ஆயிரத்து 560 ரூபாயில் தொடங்குவதாக கூறிய அவர், ஒரு சார்ஜில் அதிக தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதே நேரம் அதிக ஆயுட் காலம் கொண்ட பேட்டரியாகவும் வடிவமைத்து இந்த ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  • எஸ். முத்துக்குமார்