‘பிகில்’ பாண்டியம்மாவா இது? ரோபோ ஷங்கர் மகளின் அசத்தல் போட்டோஷூட்!

 

‘பிகில்’ பாண்டியம்மாவா இது?  ரோபோ ஷங்கர் மகளின் அசத்தல்  போட்டோஷூட்!

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்த  இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து உருவாகிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்த  இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

பெண்களை கவுரவிக்கும் வகையிலும், கால்பந்து விளையாட்டை முன்னிலைப்படுத்தியும் எடுக்கப்பட்ட இந்த படத்தில்  நடிகர் ரோபோ மகள் இந்திரஜா, பாண்டியம்மா கேரக்டரில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. 

ttn

இந்நிலையில்  இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ttn

அதில் செம்ம மார்டனாக மாறியுள்ள அவர், இது இந்திரஜா ஷங்கரா  என்று கேட்கும் அளவுக்கு அசத்தலாக உள்ளார்.

ttn

இந்த புகைப்படத்தைக் கண்ட பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.