‘கொஞ்சம் சிம்ரன் ; கொஞ்சம் த்ரிஷா’: பிரியா பாவனி ஷங்கரை புகழ்ந்த பிரபல இயக்குநர் !
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் திரையுலகில் செய்தியாளராக இருந்து பின்பு சின்னதிரையில் நுழைந்து வெள்ளித்திரை வரை படிப்படியாகக் கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடத்து வருகிறார். தற்போது மான்ஸடர் படத்திற்கு பின் மீண்டும் இவர் எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார்.
“ Bommai “ …. isn’t @priya_Bshankar looks like konjam @SimranbaggaOffc & konjam @trishtrashers ? pic.twitter.com/xVb4iKnE9t
— S J Suryah (@iam_SJSuryah) January 11, 2020
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், பொம்மை படத்தில் அவர் பிரியா பவானி ஷங்கர் போல இல்லை. கொஞ்சம் சிம்ரன், சொஞ்சம் திரிஷா போல இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.