ஹவுஸ் மேட்ஸ் முன்னியில் முகனிடம் காதலை வெளிப்படுத்திய அபிராமி!
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று வாரத்தை கடந்து விட்டது. அதில் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேறிய நிலையில் இரண்டாவது போட்டியாளராக நேற்று வனிதா விஜயகுமார் வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வீடியோ சற்று முன் வெளியானது. அதில் பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதாவது, முதலாவது நபராக வந்து பேசிய முகன், ‘எனக்கு அபிராமியுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது’ என்று சொல்கிறார் . அதைக் கேட்ட அபிராமி புன்னகைக்கிறார்.
#Day22 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/KxhbmSttdZ
— Vijay Television (@vijaytelevision) July 15, 2019
பின்னர் பேசிய அபிராமி, ‘முகன் என்னுடைய சந்தோஷம் , துக்கம் அனைத்தையும் உன்னிடம் நிறையப் பகிர்ந்துள்ளேன். நீ அப்போதெல்லாம் ஒரு நல்ல நண்பனாக எனக்குத் தோல் கொடுத்திருக்கிறாய் என்று கூறிக்கொண்டிருக்கும் போதே சட்டென்று ஐ லவ் யூ முகன்’ என்று ஹவுஸ் மேட்ஸ் அனைவரது முன்னிலையில் சொல்லிவிட்டார். இதனைக் கேட்ட முகன் வெட்கத்தில் தலைகுனிந்து சிரிக்கிறார்.