ஹன்சிகாவை தொடர்ந்து விஷால் பட ஹீரோயின் செல்போன் ஹேக்!

 

ஹன்சிகாவை தொடர்ந்து விஷால் பட ஹீரோயின் செல்போன் ஹேக்!

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோயின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு வரும் நிலையில்  தற்போது நடிகை பூஜா தேவரியாவின் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோயின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு வரும் நிலையில்  தற்போது நடிகை பூஜா தேவரியாவின் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் தனுஷின் மயக்கம் என்ன படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா தேவரியா. அதைத்தொடர்ந்து இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, ஆந்திரா மெஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துத்திருந்தார். இவர் தற்போது விஷாலுடன் இணைந்து ‘அயோக்யா’ படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், நடிகை பூஜா தேவரியா தனது செல்போனை யாரோ ஹாக் செய்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் அதில், ‘ எனது செல்போன் எண் யாரிடமாவது இருந்தால் பிளாக் செய்யுங்கள். இன்று காலை 10 மணிக்கு எனது செல்போன் ஹேக் செய்யப்பட்டது. ஹேக் செய்தவர்கள் எனது வாட்ஸ் ஆப்யை பயன்படுத்தி எனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொடர்ந்து குறுச்செய்தி அனுப்புகின்றனர். தயவு செய்து அதற்கு யாரும் பதிலனுப்ப வேண்டாம்’ என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.