வெள்ள நிவாரணத்துக்காக கார் பேன்சி எண்ணை தியாகம் செய்த பிரபல நடிகர்

 

வெள்ள நிவாரணத்துக்காக கார் பேன்சி எண்ணை தியாகம் செய்த பிரபல நடிகர்

சமீபத்தில் நடிகராக வலம் வந்த பிருத்விராஜ், சமீபத்தில் மோகன்லாலை வைத்து இயக்கிய ‘லூசிபர்’ படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.  தனது வீட்டில் விதவிதமான கார்களை வைத்திருக்கும் பிரித்விராஜிற்கு கார்கள் மீது எப்போதும் அலாதி பிரியம் உண்டு. சமீபத்தில் விலை உயர்ந்த லம்போர்கினி காரை வாங்கினார் பிருத்விராஜ். ஒவ்வொரு முறை விதவிதமான கார்களை வாங்கும் பிருத்விராஜ், தனது காருக்கு பேன்சி எண்ணையும் கேட்டு வாங்குவது வழக்கம்.

வெள்ள நிவாரணத்துக்காக கார் பேன்சி எண்ணை தியாகம் செய்த பிரபல நடிகர்

சமீபத்தில் நடிகராக வலம் வந்த பிருத்விராஜ், சமீபத்தில் மோகன்லாலை வைத்து இயக்கிய ‘லூசிபர்’ படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.  தனது வீட்டில் விதவிதமான கார்களை வைத்திருக்கும் பிரித்விராஜிற்கு கார்கள் மீது எப்போதும் அலாதி பிரியம் உண்டு. சமீபத்தில் விலை உயர்ந்த லம்போர்கினி காரை வாங்கினார் பிருத்விராஜ். ஒவ்வொரு முறை விதவிதமான கார்களை வாங்கும் பிருத்விராஜ், தனது காருக்கு பேன்சி எண்ணையும் கேட்டு வாங்குவது வழக்கம். அப்படி

சமீபத்தில் வாங்கிய லம்போர்கினி காருக்கான பேன்சி எண் பெறுவதற்காக இவர் ரூ.6  லட்சம் செலவு செய்தார். இந்நிலையில், இவர் ரூ.3 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஓக்  காரை வாங்கினார். இந்த காருக்கு கே.எல். 07 – சிஎஸ்7777 என்ற எண் கிடைக்க கொச்சி ஆர்டிஓ ஆபிசில் பதிவும் செய்து வைத்திருந்தார். இந்த எண்ணிற்கு மேலும் பலர்  விண்ணப்பித்து இருந்தார்கள். 
ஆர்டிஓ சட்ட திட்டத்தின் படி, வாகனத்திற்கான எண்களாக, ஒரே எண்ணை கேட்டு பலரும் விண்ணப்பித்தால் அப்படி கேட்கப்படுகிற எண் ஏலத்தில்  விடப்படுவது வழக்கம். அதிக தொகை கேட்பவர்களுக்கு அந்த குறிப்பிட்ட எண் ஒதுக்கப்படும்.  பிருத்விராஜ் கேட்ட எண்ணிற்கு பலர் போட்டி போட்டதால் ஏலத்தொகை பல லட்சத்தை  தாண்ட வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில், பிருத்விராஜ் திடீர் என்று ஏலத்தில்  இருந்து விலகி கொள்வதாக ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவித்துள்ளார். ஏலம்  எடுக்கும் பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்க  முடிவு செய்துள்ளதாக பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது,  நிவாரணத்திற்கு  பிருத்விராஜ்  9 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.