விஷாலுக்கு போட்டியாக டிவி ஷோ ஹோஸ்ட் பண்ணும் வரலக்ஷ்மி!
நடிகர் விஷாலுக்கு போட்டியாக அவரது நெருங்கிய தோழியும், நடிகையுமான வரலக்ஷ்மியும் டிவி ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.
சென்னை: நடிகர் விஷாலுக்கு போட்டியாக அவரது நெருங்கிய தோழியும், நடிகையுமான வரலக்ஷ்மியும் டிவி ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான உலகநாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் ‘ நிகழ்ச்சியின் 2 சீசனை தொகுத்து வழங்கினார். மக்கள் மேடையாக பிக் பாஸ் மேடையை பயன்படுத்திய கமல், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பல கருத்துக்களை மக்களிடத்தில் பேசினார்.
கமலின் இந்த ஷோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், அரசியலில் களமிறங்க திட்டமிட்டு வரும் நடிகர் விஷால், சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஒரு ஷோவை தொகுத்து வழங்குகிறார். ’சன் நாம் ஒருவர்’ என்ற இந்நிகழ்ச்சி இன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. சமூக மாற்றத்திற்கான முயற்சியாக அன்பை விதைக்க இந்த ஷோவை விஷால் தொகுத்து வழங்குகிறார்.
A completely different attempt to show we all care….#SunNaamOruvar A show to change the lives of those who are waiting to be loved….
Need all your Love & Support….GB@SunTV @Karthi_Offl pic.twitter.com/F6Sxbc8xYk
— Vishal (@VishalKOfficial) October 4, 2018
இந்நிலையில், விஷாலுக்கு போட்டியாக ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ‘என்னை அறிந்தால்’ என்ற நிகழ்ச்சியை அவரது தோழி வரலக்ஷ்மி தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி வரும் அக்.14ம் தேதி முதல் வாரந்தோறும் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
Lets stop questioning what other have done.. and lets start asking ourselves what are we doing..?! Join me on this new venture to try and be the change.. if we change so will the world #unnaiarinthal @JayaTvOfficial #jayatv #Oct14 https://t.co/1XNMUprXTF #BeTheChange #oct14 pic.twitter.com/FAr2mMWYEl
— varu sarathkumar (@varusarath) October 7, 2018
சமூக மாற்றத்திற்கான முதல் படியாக, இந்த ஷோவை நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தொகுத்து வழங்கவிருக்கிறார். திரைப்படங்களில் பரபரப்பாக நடித்து வரும் இவர்கள் தற்போது டிவி ஆடியன்ஸ் பக்கம் கவனம் செலுத்துவதற்கான காரணம் தெரியவில்லை.