விஜய்யை இயக்கும் முதல் பெண் இயக்குநர்! தளபதி 65 அப்டேட்ஸ்… 

 

விஜய்யை இயக்கும் முதல் பெண் இயக்குநர்! தளபதி 65 அப்டேட்ஸ்… 

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் `மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்தன.ஆனால் அது வதந்தி என விளக்கமளிக்கப்பட்டது. விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்ற பரபரப்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பாகவுள்ளது. 

vijay

‘விஜய் 65’ படத்தை இயக்கப்போகும் இயக்குநர் சுதா கொங்கரா என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மாதவன், ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றார். தற்போது சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகவுள்ள நிலையில், தளபதி 65 படத்தை சுதா இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சூரரைப் போற்று படத்திற்கு இசையமைக்கும் ஜீவி.பிரகாஷே விஜய் 65 படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். விஜய், சுதா, ஜீ.வி.பிரகாஷ் மூவருக்கும் அட்வான்ஸ் கொடுத்து தளபதி 65 ஐ சன் பிக்சர்ஸ் உறுதிசெய்துள்ளது.