விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய ‘தளபதி 63’ பட தயாரிப்பாளர்!
சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்த ‘விஜய் 63’ பட தயாரிப்பாளர் நடிகர் விஜய் சேதுபதியை வெகுவாக பாராட்டியுள்ளார்.
சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்த ‘விஜய் 63’ பட தயாரிப்பாளர் நடிகர் விஜய் சேதுபதியை வெகுவாக பாராட்டியுள்ளார்.
ஆரண்ய காண்டம் திரைப்படம் வெளியாகிப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகப் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#SuperDeluxe Loved the line the cast the concept and the film making style @VijaySethuOffl is the most versatile actor in this generation @Samanthaprabhu2 Just loved ur performance Congratulations @itisthatis May the force be with you ?
— Archana Kalpathi (@archanakalpathi) March 29, 2019
இந்நிலையில் இப்படம் குறித்து விஜய் 63 பட கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் ‘சூப்பர் டீலக்ஸ் படத்தின் கதைக்களம் நடிகர்கள் தேர்வு, படமாக்கிய விதம் அனைத்தும் பிடித்திருந்தது. சமந்தாவின் நடிப்பைப் பார்த்து ரசித்தேன். இவை அனைத்தும் தியாகராஜன் குமாரராஜாவாகிய உங்களால் தான் நடந்தது’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாநாடு சூப்பர் கதை நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பதிவு!