விக்ரம் நடிக்கும் “கோப்ரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 58-வது படத்தில் நடிக்கிறார். கோப்ரா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 58-வது படத்தில் நடிக்கிறார். கோப்ரா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் , ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விக்ரம் பல தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
Sure you will be Amazed with Chiyaan Vikram’s #CobraFirstLook
This 28th February! #CobraFirstLookUpdate pic.twitter.com/bEdRhB7SeT
— Seven Screen Studio (@7screenstudio) February 26, 2020
இந்நிலையில் விக்ரம் நடிக்கும் “கோப்ரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.