வாத்தி கம்மிங் ஒத்து பாடலுக்கு மோசமாக நடனம் ஆடிய அனிருத்: வைரல் வீடியோ!

 

வாத்தி கம்மிங் ஒத்து பாடலுக்கு மோசமாக நடனம் ஆடிய அனிருத்: வைரல் வீடியோ!

இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது.  

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது.  

 

படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகவும், இதனால் இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இப்படத்தின்   குட்டி ஸ்டோரி பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது. அனிருத் இசையமைக்க அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளை எழுதியிருந்தார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ttn

அதேபோல் நேற்று முன்தினம் மார்ச்  10 ஆம் தேதி “வாத்தி கம்மிங் ஒத்து” என்ற இரண்டாவது பாடல் வெளியானது. இந்தப் பாடலும் செம ஹிட் ஆகி உள்ளது. 

இந்நிலையில் “வாத்தி கம்மிங் ஒத்து”  பாடலுக்கு இசையமைப்பாளர் அனிரூத் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவானது  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை இதுவரை யூடியூப்பில்  80 லட்சம் பேர் பார்த்துள்ளனர், 7 லட்சத்தி 46 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.