வலுக்கும் பேட்ட vs விஸ்வாசம் மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்!

 

வலுக்கும் பேட்ட vs  விஸ்வாசம்  மோதல்: கடுப்பான அஜித் பட இயக்குநர்!

பேட்ட மற்றும் விஸ்வாசம் வசூல் தொடர்பாக இயக்குநர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: பேட்ட மற்றும் விஸ்வாசம் வசூல் தொடர்பாக இயக்குநர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயக்குநர் சிவா -அஜித் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அதே போல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

venkat

இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. படக்குழுவினரும் தங்களது பங்குக்கு எங்கள் படம் தான் அதிகம் வசூலித்து சாதனை படைத்துள்ளது என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனால் சமூகவலைதளங்களில் இரண்டு தரப்பு ரசிகர்களுமே ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்தி விமர்சித்து வருகின்றனர். 

இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இது பேட்ட Vs விஸ்வாசம் அல்ல. பேட்டயும் விஸ்வாசமும். தயவுசெய்து அஜித் ரசிகர்களும், ரஜினிகாந்த் ரசிகர்களும் படத்தைக் கொண்டாடுங்கள். அன்பை பரப்புங்கள் வெறுப்பை உமிழாதீர்கள். இரண்டு படங்களையும் ஒப்பிடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல துவக்கமாக அமைந்துள்ளது. பேட்ட மற்றும் விஸ்வாசம் குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் வாழ்த்துகள். நன்றி’ என்றுபதிவிட்டுள்ளார்.