வருமான வரித்துறையின் பிடியில் விஜய்…#WeStandWithVIJAY ஹேஷ்டாக்குடன் களமிறங்கிய ரசிகர்கள்!

வருமான வரித்துறையின் பிடியில் விஜய்…#WeStandWithVIJAY ஹேஷ்டாக்குடன் களமிறங்கிய ரசிகர்கள்!

பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக  ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்கள், அன்பு செழியன்  வீடு மற்றும் அலுவலகம் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக  ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்கள், அன்பு செழியன்  வீடு மற்றும் அலுவலகம் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

ttn

பின்பு மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமானவரித்துறையினர்  நடிகர் விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவரை காரில் அழைத்துச் சென்றும் விசாரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ttn

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு மற்றும்  பனையூர் இல்லத்தில் என விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு  வருகின்றனராம்.

ttn

கட்டாயமாக மாஸ்டர் படப்பிடிப்பில் அழைத்து செல்லப்பட்ட விஜய், ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தியதாகவும், பின்பு இரவு 9 மணியளவில் அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. 

rttn

இந்நிலையில்  விஜய்யின் ரசிகர்கள் #WeStandWithVIJAY, #WeStandWithTHALAPATHY என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளனர். விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.