வரி ஏய்ப்பு; மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

 

வரி ஏய்ப்பு; மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

சேவை வரி செலுத்தாததால் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குகளை ஜி.எஸ்.டி வரித்துறையினர் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹைதராபாத்: சேவை வரி செலுத்தாததால் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குகளை ஜி.எஸ்.டி வரித்துறையினர் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, கடந்த 2007-2008 ம் ஆண்டில் சினிமா, விளம்பரம், மற்றும் சில நிறுவனங்களுக்கான விளம்பர தூதராக இருந்து வருவாய் ஈட்டியுள்ளார். இதற்காக அவர் செலுத்த வேண்டிய வரிப் பணத்தை செலுத்தாததால் ஜி.எஸ்.டி வரித்துறை அவரது வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.

maheshbabu

இது தொடர்பாக ஜி.எஸ்.டி வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் மகேஷ் பாபு ரூ.18.5 லட்சம் சேவை வரி செலுத்த வேண்டியிருந்தது. தற்போது அவருக்கான வரித்தொகை அபராதம், வட்டி என மொத்தம் ரூ. 73.5 லட்சம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் வரி செலுத்தாததாலும், அவரை தொடர்புக் கொள்ள முடியாததாலும் மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளோம்.

maheshbabu

மகேஷ் பாபுவின் ஆக்ஸிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து ரூ.42 லட்சம் பெற்றுவிட்டோம், மீதமுள்ள தொகையை ஐசிஐசிஐ வங்கியில் இருந்து பெறுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.