ராதாரவியை பத்தி உங்களுக்கு தெரியுமா? பெண் அமைச்சரிடம் போட்டு கொடுத்த சின்மயி
கடந்த 30 ஆம் தேதி ராதாரவி பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
‘கொலையுதிர்க்காலம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் நடிகர் ராதாரவியை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்தது தலைமை கழகம். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ராதாரவி அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சேர்ந்து 6 மாதங்களே ஆன நிலையில் கடந்த 30 ஆம் தேதி ராதாரவி பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்ததற்கு சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், நடிகர் ராதாரவி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பல மேடைகளில் பேசி வருகிறார்.
டப்பிங் யூனியனில் அவர் தலைவராக இருந்தபோது அவரை எதிர்த்து பேசினாலோ அல்லது பாலியல் தொல்லை குறித்த புகார் தெரிவதாலோ உடனே யூனியனில் இருந்து நீக்கிவிடுவார். இவரை கட்சியில் இணைத்து என்ன சொல்ல வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதோடு, பாஜக தலைமைக்கும், பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணியையும் டேக் செய்துள்ளார்.
Hi @BJP4India
This man, Mr Radha Ravi is known to insult, abuse women at multiple events; even speeches on ‘Go ahead!! Rape!
He runs a Dubbing Union that bans those who question him / complain of sexual harassment in the industry.
What message are you giving to women now? pic.twitter.com/zIuKQPCDF5— Chinmayi Sripaada (@Chinmayi) November 30, 2019
ஏற்கனவே சின்மயிக்கும் ராதாரவிக்குமிடையே லடாய் சென்று கொண்டிருக்கும் நிலையில் ராதாரவி பாஜகவில் இணைந்ததற்கு எதிராக கருத்து கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.