ரஜினிகாந்த் பிறந்தநாள்: ‘கோ’ பூஜை வழிபாட்டில் கலந்துகொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ்
இந்தியா மட்டுமல்லாது ஜப்பான் வரையிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் தங்கள் ஆதர்ச நாயகனின் பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடி மகிழ்கின்றனர்.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவரது கேக் வெட்டி ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் ரஜினி ரசிகர்கள் இலவச நலத்திட்ட உதவிகள், ஆட்டம் பாட்டம் என பட்டையை கிளப்பி வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது ஜப்பான் வரையிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் தங்கள் ஆதர்ச நாயகனின் பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளையொட்டி சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் .கோவிலில் நடைபெற்ற கோ பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளையொட்டி சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கோ பூஜை வழிபாட்டில் நடிகர் ராகவா லாரன்ஸ்#HBDThalaivarSuperstarRAJINI #HBDSuperstarRajinikanth #HappyBirthdayRajinikanth #Rajnikanth #lawrence #toptamilnews #ttn pic.twitter.com/Yr0PJusmiy
— Top Tamil News (@toptamilnews) December 12, 2019
அவருடன் இயக்குநர் சாய்ரமணி ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.