ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் வீடியோ!
நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டிற்கு வெளியே ரசிகர்களைச் சந்தித்து தீபாவளி வாழ்த்துக் கூறியது ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டிற்கு வெளியே ரசிகர்களைச் சந்தித்து தீபாவளி வாழ்த்துக் கூறியது ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களைச் சந்தித்தார். போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே இன்று கூடி இருந்த தனது ரசிகர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த், அவர்களுக்குத் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
#ThalaivarForAReason ?❤️??#Superstar #Rajinikanth Meets Fans To Greet Them On The Auspicious Ocassion Of #Diwali pic.twitter.com/HJZn4aT2cc
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 6, 2018
ரஜினியை பார்க்க அவரது ரசிகர்கள் காலையிலேயே அங்குக் கூடி இருந்தனர். இந்தாண்டு தீபாவளிக்கு ரஜினியின் 2.0 படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.