யூடியூபிலும் மரண மாஸ் காட்டும் ‘பேட்ட’ டீசர்!
ரஜினிகாந்த் நடித்துள்ள ’பேட்ட’ திரைப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 74 லட்சம் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ’பேட்ட’ திரைப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 74 லட்சம் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ படத்தின் மரண மாஸான பாடல்கள் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடையே மாஸ் ஹிட்டான நிலையில், சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலில் அனல் பறக்கும் டீசர் நேற்று அவரது பிறந்தநாளையொட்டி வெளியானது.
#PettaBirthdayTrEAtSER https://t.co/JGJo2cBuFb pic.twitter.com/pIlI3cRyUd
— karthik subbaraj (@karthiksubbaraj) December 13, 2018
ரஜினி ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டாரின் மரண மாஸ் பிறந்தநாள் ட்ரீட்டாக அமைந்த ’பேட்ட’ டீசர் வெளியான 20 நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து, அதே வேகத்தில் அடுத்த 40 நிமிடங்களுக்கு 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றது. 24 மணி நேரத்தில் 75 லட்சத்துக்கும் அதிகமானோர் யூடியூபில் ‘பேட்ட’ டீசரை பார்த்துள்ளனர். இந்த டீசர் தொடர்ந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தையே தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
The most celebrated #PettaBirthdayTrEAStER crosses 7.4M+ views on YouTube in 24 hours! pic.twitter.com/viVLyepoYH
— Sun Pictures (@sunpictures) December 13, 2018
முழுக்க முழுக்க ரஜினிஸம் இடம்பெற்றுள்ள காட்சிகளை பார்த்தால், இந்தப்படம் ரஜினி ரசிகர்களால் ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மல்டி ஸ்டாரர் படமான ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.