முழுசா ஜெயலலிதாவாக மாறிய கங்கனா …ஆச்சரியப்பட வைக்கும் ஃபஸ்ட்லுக் போஸ்டர்!
எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலரும் படமாக எடுக்க முனைப்புக் காட்டி வந்த நிலையில் இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார். தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. புரொஸ்தெடிக் மேக்கப் உள்ளிட்ட பணிகளுக்காக அமெரிக்காவில் உள்ள தலைவி படக்குழு தொடர்ந்து அதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தலைவி படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளதுடன், படத்தின் ரெட்ரோ இசை வெகு விரைவில் வர இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். போஸ்டரில் ஜெயலலிதாவாக மாறியுள்ள கங்கனா கொஞ்சம் கூட தனது சாயலில் இல்லாமல் முழுவதுமாக ஜெயலலிதாவாக மாறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
#thalaivi … let’s listen to some retro soon pic.twitter.com/SXFcfkeAjk
— G.V.Prakash Kumar (@gvprakash) November 23, 2019
முன்னதாக இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.