முதல் படம் குறித்த உண்மையை வெளியிட்ட தர்ஷன்…வைரல் வீடியோ!
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் தர்ஷனை ஒப்பந்தம் செய்வதாக கமல் மேடையிலேயே அறிவித்தார்.
பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷனுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் தர்ஷனை ஒப்பந்தம் செய்வதாக கமல் மேடையிலேயே அறிவித்தார்.
இதையடுத்து தர்ஷனின் அடுத்தடுத்த படங்கள் என்ன? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் அவரது ரசிகர்களை அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் தனது முதல் படத்தில் கையெழுத்திட்டு இருப்பதாகவும், அது பிரம்மாண்ட டீம் என்றும் கூறியுள்ளார். மேலும் விரைவில் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறியுள்ள அவர் படத்தின் இயக்குநர் மற்றும் மற்ற விவரங்களை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம் தர்ஷன் கூறிய ஹாப்பி நியூஸுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
முன்னதாக முகத்தில் தாடி, கையில் சிகரெட், கழுத்தில் ருத்ராட்சமாலை என புது கெட்டப்பில் தர்ஷனின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.