மீண்டும் ட்ரெண்டிங்கில் பிரியா வாரியர்!
நடிகை பிரியா வாரியர் மற்றும் ரோஷன் நடித்த ஒரு அடார் லவ் திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகை பிரியா வாரியர் மற்றும் ரோஷன் நடித்த ஒரு அடார் லவ் திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சி வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் வரும் ‘மாணிக்க மலராய பூவி’ பாடலில் தனது புருவ அசைவுகளால் சமூக வலைத்தளத்தில் ஒரே நைட்டில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவரது புருவ அசைவுகள் பாலிவுட் வரை பிரபலமானதையடுத்து, தேசிய அளவில் பிரபலமானார். கடந்த ஆண்டு வெளியான இந்த ஒரே ஒரு டீசரால் இந்தியாவின் உள்ள பல முன்னணி நடிகைகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு பல நாட்களாக முதலிடத்தையே பிடித்துள்ளார்.
பிரியா வாரியருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்தது.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக கலைப்புலி தாணு படத்தை வெளியிடுகிறார்.பள்ளியில் நடக்கும் காதல் கதை என்பதால் இந்த படத்தை காதலர் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் இருந்து ஒரு முக்கிய காட்சியை ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த காட்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதையடுத்து தமிழில் நல்ல வசூலை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.