மீண்டும் சின்னதிரையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்… நிகழ்ச்சி ஒண்ணுதான்; சேனல் தான் வேற!
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனால் அவர் சில காலம் சின்னதிரையில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதுடன், சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இதுதவிர படங்கள் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வரும் அவர், ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தையும் சமீபத்தில் இயக்கினார். இப்படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ‘ஆடுகளம்’ கிஷோர், ‘கோலி சோடா’ கிஷோர், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
அதே சமயம் லட்சுமி ராமகிருஷ்ணனை பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய் சேர்த்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனால் அவர் சில காலம் சின்னதிரையில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ என்ற புதிய நிகழ்ச்சியில் தோன்றவுள்ளார். சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்து அலசி ஆராய்ந்து உண்மைத்தன்மையை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பாகவுள்ளதாம்.
பிப்ரவரி 17-ம் தேதி முதல் திங்கள் முதல் வியாழன்வரை இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.