“மிக மிக அவசரம்” ஒத்திவைப்பு… 10 மாதம் கருவை சுமந்த பெண்ணின் வயிற்றில் பிரசவ நேரத்தில் கட்டையால் அடிப்பது போன்றது – பாரதிராஜா 

 

“மிக மிக அவசரம்” ஒத்திவைப்பு… 10 மாதம் கருவை சுமந்த பெண்ணின் வயிற்றில் பிரசவ நேரத்தில் கட்டையால் அடிப்பது போன்றது – பாரதிராஜா 

மிக மிக அவசரம் படத்திற்கு திரையரங்குகள் மறுக்கப்பட்டதை கண்டித்து இயக்குநர் பாரதிராஜாவின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மிக மிக அவசரம் படத்திற்கு திரையரங்குகள் மறுக்கப்பட்டதை கண்டித்து இயக்குநர் பாரதிராஜாவின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. இதில் சீமான், ஸ்ரீபிரியங்கா, முத்துராமன், ஹரிஷ், ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண் போலீசார் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற லிப்ரா நிறுவனத்தை சேர்ந்த ரவீந்தர் சந்திரசேகர் அக்டோபர் 11-ந்தேதி மிக மிக அவசரம் திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தார். ஆனால் படத்துக்கு போதுமான தியேட்டர்கள் ஒதுக்காததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

BharathiRaja Statement

இந்நிலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ என் இனிய தமிழ் மக்களே, சமீபகாலத்தில் நான் பார்த்து ரசித்த திரைப்படம் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கிய மிக மிக அவசரம். பெண்களின் கொடுந்துயர் ஒன்றினை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம் சமுதாயத்துக்கு தேவையான படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் பெருமக்கள், காவல்துறை அதிகாரிகள், பெண் ஆளுமைகள் என பலர் நெகிழ்ந்து பாராட்டிய படம். கடந்த 11ம் தேதி இப்படம் வெளியாக இருந்தது. மூன்று வாரங்களுக்கு மேலாக 85 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால் படம் வெளியாகும் முதல் நாள் இரவு 17 காட்சிகள் தான் திரையிட முடியும் என்று கூறிவிட்டனர் திரையரங்க உரிமையாளர்கள். காரணம் அதே நாளில் வேறு படம் வருகிறதாம். அதற்கு அதிக திரையங்குகளை ஒதுக்குவோம் என்று கூறிவிட்டனர் பத்து மாதம் சுமந்து பல வலிகளை தாங்கி பிரசவிக்கும் நேரம் பெண்ணின் வயிற்றில் கட்டையால் அடிப்பது போன்ற கொடூர செயல் இது.

Bharathi Raja

மக்கள் எந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதை யாரோ சிலர் தீர்மானிப்பது முறையல்ல. தவிர எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் நெறிமுறைகளுக்கு வாக்குகள் வாக்கு கட்டுப்பட்டு நடப்பதை அனைவருக்கும் நல்லது. திரையரங்க உரிமையாளர்கள் இதே போக்கை தொடர்ந்தால் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். திரைத்துறையினரிடம் அக்கறையும் பாசமும் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதுபோன்ற சிறு பட்ஜெட் படங்களுக்கு மீண்டும் பிரச்சினை வராமல் இருக்க நல்லதொரு தீர்வு கிடைக்க செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.