மாஸ் காட்டுவாரா ரஜினி: 2.0 டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் நவ.29ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்தது. ஆனாலும், இப்படத்தின் தமிழ் டீசரை விட ஹிந்தி டீசர் அதிக லைக்ஸ்களை குவித்தது. ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
The FIFTH FORCE is coming! #2Point0Trailer #2Point0TrailerOnNov3 pic.twitter.com/CYhOZ0R47N
— A.R.Rahman (@arrahman) October 28, 2018
இந்நிலையில் இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் வரும் நவ.3ம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.