மாப்பிள்ளை கோலத்தில் படத்தை முடித்த யோகி பாபு: வைரலாகும் புகைப்படம்
நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்து வந்த பன்னிக்குட்டி படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்து வந்த பன்னிக்குட்டி படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது வரும் அனைத்தும் படங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது யோகி பாபு மட்டுமே. தனது எதார்த்தமான நகைச்சுவை தண்மை மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார். தற்போது இவர் தளபதி63, தர்பார், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி இவர் ஹீரோவாக நடித்துள்ள ‘தர்ம பிரபு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இவர் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டிருந்த மற்றொரு படத்தின் படப்பிடிப்பு முடிவுயடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் அனுசரன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் யோகி பாபு நடித்து வந்த திரைப்படம் ‘பன்னிக்குட்டி’. முழுக்க முழுக்க பன்னிகுட்டியுடன் யோகி பாபு அடிக்கும் லூட்டியை, மையப்படுத்தி காமெடியாக இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு, தற்போது நான்கே மாதத்தில் முடிவுயடைந்துளளதாக கூறப்படுகிறது. இதில் கருணாகரன்,சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, T.P கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர் , ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் யோகி பாபு இதில் மாப்பிள்ளை கோலத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அது தற்போது வைரலாக பரவி வருகிறது.