‘மரண மாஸ்’ டூ ‘தப்பட் மாறா’ வரை..!; பட்டையை கிளப்பும் அனிருத்தின் ‘பேட்ட’ இசை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் இசை இன்று ரிலீசாகவுள்ளது.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் இசை இன்று ரிலீசாகவுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது. தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
All fired up for the #MaranaMass #PettaAudioLaunch ? Don’t miss it Today at 6:30pm on Sun TV!
Overseas audience can enjoy the Petta Audio Launch live on Sun NXT app at the same time (IST 6:30pm) #PettaAudioLaunchOnSunTv #PettaAudioFromToday pic.twitter.com/y75FoFNWYz— Sun Pictures (@sunpictures) December 9, 2018
‘மரணமாஸ்’, ’உல்லால்லா’ போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்த நிலையில், காதல் டிராக், ஃபிளாஷ்பேக் டிராக், கேரக்டர் தீம் உட்பட 11 பாடல்கள் ரிலீசாகவுள்ளன. ’பேட்ட’ இசை வெளியீட்டு விழாவில் அனிருத்தின் லைவ் பெர்ஃபார்மன்ஸும் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் டிரைலர் அல்லது டீசர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான 12ம் தேதி ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
#PettaTracklist @rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers @SasikumarDir @Nawazuddin_S@dhanushkraja @lyricist_Vivek @sonymusicsouth pic.twitter.com/gSyycB6Rji
— Sun Pictures (@sunpictures) December 8, 2018
மல்டி ஸ்டாரர் படமான ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இத்துடன், தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படமும், சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.