மம்முட்டியுடன் மோதும் ராஜ்கிரண்! ‘ஷைலக்’ மலையாள திரைப்பட விமர்சனம்

மம்முட்டியுடன் மோதும் ராஜ்கிரண்! ‘ஷைலக்’ மலையாள திரைப்பட விமர்சனம்

மாமாங்கம் படத்தின் தோல்வி மம்முட்டி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.இந்த வாரம் வெளிவந்து இருக்கும் ‘ஷைலக்’ அவர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு போய்விட்டது.படம் துவங்கிய நிமிடத்திலிருந்தே சிரிப்புச் சரவெடிதான் தியேட்டரில்.

mammoty

மம்முட்டி படத்தில் கருனையே இல்லாத கந்துவட்டிக்காரர்.அதிலும் சினிமா ஃபைனாசியர். அவர் யார்,அவரது பின்னணி என்ன என்பது ரகசியம்.அது ஊரில் யாருக்கும் தெரியாது,கூடவே இருக்கும் சந்தோஷ் மற்றும் ஹரீஷ் கன்னாரன் உட்பட. கருப்புச் சட்டை கருப்பு வேட்டியில் மம்முட்டி தோன்றும் முதல் காட்சியிலேயே இயக்குநர் அஜய் வாசுதேவ் கைதட்டல் பெறுகிறார். 

actor

இது அவருக்கு மம்முட்டியுடன் மூன்றாவது படம். ஏற்கனவே இருவரும் இணைந்து ராஜாதி ராஜா, மாஸ்ட்டர் பீஸ்’ என்று இரண்டு ஹிட் கொடுத்து இருக்கிறார்கள்.
கொடூர  ஃபைனாசியரான மம்முட்டிக்கும் சினிமா தயாரிப்பாளர் கலாபவன் ஷாஜனுக்கும் ஏற்படும் மோதலில் கெட்ட போலீஸ் சிந்திக் நுழைந்த பிறகு,அதுவரை காமடியாகப் போய்கொண்டு இருக்கும் படத்தில் சூடுபிடிக்கிறது. 

shylock

இடைவேளைக்கு பிறகுதான் ராஜ்கிரண் எண்ட்ரி, அவருக்கு மிகவும் பொருத்தமான கேரக்டர்.ராஜ்கிரண் மட்டுமல்ல இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீனாவும் தோன்றுகிறார்.இவர்கள் தவிர பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. கடைசிவரைத் தொய்வில்லாமல் படத்தைக் கொண்டு செல்கிறது அனீஷ் ஹமீது,பிபின் மோகன் திரைக்கதை.  அஜய் வாசுதேவன் கூட்டணிக்கு இன்னொரு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது ஷைலக்!