மகளிர் தினத்தை முன்னிட்டு திரௌபதி திரைப்படம்….புதுச்சேரி ஆளுநரின் ஏற்பாடு!
இப்படத்தில் நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திரௌபதி”. இப்படத்தில் நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கருணாஸ், ஜீவா ரவி, பாரதி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நாடக காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் சமீபத்தில் வெளியாகி ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றது.
சமீபத்தில் இப்படத்தை குடும்பத்துடன் பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ், பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம் என்று கூறியிருந்தார். அதேபோல் இயக்குநர் பா. ரஞ்சித்தை ‘திரௌபதி’ திரைப்படத்தைப் பார்க்க வருமாறு, இப்படத்தின் இயக்குநர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் JSK கோபி அழைப்பு விடுத்து பரபரப்பைக் கிளப்பினர்.
Celebrating Womanhood!
Raj Nivas Puducherry takes the Women Housekeeping staff to cinemas to watch film – Draupadi.#IWD2020 #InternationalWomensDay @thekiranbedi @ashapondy pic.twitter.com/Wul8PYdHfu— Lt. Gov. Puducherry (@LGov_Puducherry) March 5, 2020
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி மார்ச் 8 ஆம் தேதி உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு தன் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண்களை திரௌபதி படம் பார்க்க வைத்துள்ளார். இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் ஜி. மோகன் கிரண் பேடிக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.