‘பேட்ட’ டிரைலர் லீக்; முன்கூட்டியே ரிலீஸ் செய்யும் படக்குழு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளது. அனிருத் இசையில் மரண மாஸான பாடல்கள், டீசரை தொடர்ந்து ‘பேட்ட’ படத்தின் டிரைலர் இன்று (டிச.28) காலை 11 மணிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
#PettaTrailerToday11am#GetRajinified #PettaPongalParaak pic.twitter.com/wgQaeaV9dy
— Sun Pictures (@sunpictures) December 28, 2018
ஆனால், 11 மணிக்கு முன்னதாகவே இப்படத்தின் டிரைலர் இணையத்தில் லீக்காகியுள்ளது. பேட்ட டிரைலரில் சுமார் 11 வினாடிகள் கொண்ட ரஜினிகாந்தின் பஞ்ச் வசனம் பேசும் காட்சி லீக்காகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால், டிரைலர் ரிலீசாகும் நேரத்தை மாற்றிவிட்டனர். ‘பேட்ட’ டிரைலர் இன்று காலை 10.25 மணிக்கு ரிலீசாகும் என்ற புதிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
We know you can’t wait so #PettaTrailerToday at 10:25am !#GetRajinified pic.twitter.com/fOu51v7ZZh
— Sun Pictures (@sunpictures) December 28, 2018
மல்டி ஸ்டார் படமான ‘பேட்ட’ படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ரஜினிஸம் பேசும் இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
காளியின் வெறித்தனத்தை காண சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.