பிறந்தநாள் கொண்டாடும் புதுமாப்பிள்ளை: குவியும் வாழ்த்து!?
நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் பிறந்தநாளையொட்டி அவருக்குப் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
சென்னை: நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் பிறந்தநாளையொட்டி அவருக்குப் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் நடிகை உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நடிகர் சிலம்பரசன், குறளரசன் என்ற இரு மகன்களும், இலக்கியா என்ற மகளும் உள்ளனர். இலக்கியாவுக்கு திருமணம் ஆன நிலையில், சமீபத்தில் சிம்புவுக்கு பெண் பார்த்து வருவதாக டி.ராஜேந்தர் கூறியிருந்தார்.
இவரது இளையமகன் குறளரசன் சிம்பு நயன்தாரா நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து வேறு எந்த படத்திலும் அவர் ஒப்பந்தமாகாத நிலையில் ஆல்பம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.
இதனிடையே இஸ்லாமியப் பெண்ணான நபீலா ஆர். அஹமத். என்பவரை குறளரசன் காதலித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதைத் தொடர்ந்து குறளரசன் – நபீலா ஆர். அஹமத் ஆகியோரின் திருமண வரவேற்பு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.
இந்நிலையில் குறளரசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் இது அவருக்கு ஸ்பெஷல் பர்த்டேவாக பார்க்கப்படுகிறது.
Let’s wish our brother #Kuralarasan the bestest birthday with the tag #HBDKuralarasan ?
– #TeamSTR #Simbu pic.twitter.com/4Jnp8BlKVG
— STR Fans Trends (@STRFansTrends) June 3, 2019
Happy birthday brother #Kuralarasan ? May the new phase of life bring you all joy & happiness in your life. #HBDKuralarasan pic.twitter.com/O0gD6ZtEbP
— Deepu (@DEEPU_S_GIRI) June 3, 2019
Wishing Aspiring Music Director #Kuralarasan a Happy Birthday #HBDKuralarasan pic.twitter.com/XalbCXn5WS
— Rajesh R (@iamrajesh_sct) June 3, 2019
குறளரசனுக்கு சிம்புவின் ரசிகர்களும், வலைதளவாசிகளும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.