பிரசாரத்தில் சில்மிஷம்: ஓங்கி பளார் விட்ட நடிகை குஷ்பு; வைரல் வீடியோ!
தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை நடிகை குஷ்பு கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு : தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை நடிகை குஷ்பு கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக-வும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. தங்களது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும் ஆதரித்து அந்தந்த கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து, வாக்கு சேகரித்தார்.
#BIGNEWS: Actress & #Congress leader #kushboo slaps a man in #Bengaluru while campaigning for party’s #Bengaluru central candidate. There was a heavy rush to see #kushboo in Hoysalanagar of the city. #LokSabhaElections2019 pic.twitter.com/CpxpLYhHm7
— NEWS9 (@NEWS9TWEETS) April 10, 2019
இதையடுத்து பிரசாரம் முடிந்து புறப்பட்ட குஷ்பு, காரில் ஏறுவதற்காக நடந்து சென்ற போது, கூட்டத்திலிருந்த இளைஞர் அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட குஷ்பு, கோபமடைந்து அந்த இளைஞரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர் பாதுகாப்பு போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் வாசிக்க: கடமையை செய்து முடித்த உலகிலேயே மிகவும் குள்ளமான பெண்: என்ன தெரியுமா?