பிரசவத்துக்கு மட்டுமல்ல; அஜித் பிறந்தநாளுக்கும் இலவசம் தான்!

 

பிரசவத்துக்கு மட்டுமல்ல; அஜித் பிறந்தநாளுக்கும் இலவசம் தான்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், திரைத்துறையில் எந்த பின்புலமுமின்றி தனது விடாமுயற்சியால் உச்சத்தை எட்டி, தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கிறார்

வேலூர்: தல அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களான ஆட்டோ ஓட்டுநர்கள் இலவசமாக பயனாளிகளுக்கு இன்று ஒருநாள் சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், திரைத்துறையில் எந்த பின்புலமுமின்றி தனது விடாமுயற்சியால் உச்சத்தை எட்டி, தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கிறார்.

ajith

தொடர் தோல்விகள், சறுக்கல்களை சந்தித்தாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு சிம்மசொப்பனமாக அமர்ந்திருக்கும் அஜித் தனது 48-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். வழக்கம் போலவே உற்சாகத்துடன் கேக்குகளை வெட்டியும், ரத்த தானம் செய்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ajith fans

அந்த வகையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில், கேக் வெட்டி அஜித் பிறந்தநாளை கொண்டாடிய அவரது ரசிகர்கள், மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினர். மேலும், பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் சுமார் 15-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள், இன்று ஒருநாள் முழுவதும் பயனாளிகளின் பயன்பாட்டுக்கு இலவச ஆட்டோ சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

அப்போது, தல அஜித்தின் பல பிறந்தநாளை இதுபோன்று கொண்டாடி பல நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்வோம் என்று ரசிகர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர்