பாஸ்கெட்டை தூக்கி அடிக்கும் முகின்: பரபரப்பாகும் பிக் பாஸ் போட்டி!

 

பாஸ்கெட்டை  தூக்கி அடிக்கும் முகின்: பரபரப்பாகும் பிக் பாஸ் போட்டி!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது. முதல் கட்டமாக நடந்த நான்கு டாஸ்க்குகளில் தனி நபராக தர்ஷனும், இரண்டாவது டாஸ்கில் குழுவாக தர்ஷன், ஷெரின், கவின் ஆகிய மூவரும் வென்றனர். மூன்றாவது டாஸ்க்கில் ஷெரினும், நான்காவது டாஸ்க்கில் முகினும்  வெற்றி பெற்றார்கள்.

 

இந்நிலையில் இன்று ஐந்து மற்றும் ஆறாவது டாஸ்க் நடைபெறவுள்ளது. அதன்படி தற்போது பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில்,  பசல் ப்ளாக்ஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் அவர்கள் உருவம் பதித்த ப்ளாக்ஸ்களை ஹவுஸ்மேட்ஸ் அடுக்கவேண்டும். அதை யாரும் கலைக்காதவாறு பாதுகாக்க வேண்டும். இந்த டாஸ்கில்  ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒருவர் ப்ளாக்ஸ் மீது  ஒருவர் பந்தால்  அடித்துக் கலைக்கின்றனர். இதில் சேரன் பக்கம் மட்டும் யாரும் செல்லவில்லை. இதனால் இந்த போட்டியில் சேரன் வெற்றி  பெறுவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.