பப்பீஸையும் விட்டுவைக்காத ஜானு மோகம்!
‘96’ படத்தில் த்ரிஷா அணிந்திருந்த சுடிதார் இளம் பெண்களை மட்டுமின்றி பப்பீஸையும் கவர்ந்துள்ளது.
சென்னை: ‘96’ படத்தில் த்ரிஷா அணிந்திருந்த சுடிதார் இளம் பெண்களை மட்டுமின்றி பப்பீஸையும் கவர்ந்துள்ளது.
விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘96’ திரைப்படம், பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானது. காதலர்கள் கொண்டாடித் தீர்த்த ‘96’ படத்தின் ராம், ஜானு கதாபாத்திரம் எதார்த்தமாக இருந்ததுடன், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக அமைந்து வெற்றி பெற்றது.
இப்படம் முழுவதும் த்ரிஷா அணிந்து வந்த மஞ்சள் நிற சுடிதார் இளசுகளிடம் வரவேற்பை பெற்றது. த்ரிஷாவின் இந்த உடை பிரபலமானதையடுத்து, தீபாவளி ஸ்பெஷலாக ஜானுஸ் டிரஸ் விற்பனைக்கு வந்தது. இந்த ஆடை பெண்களை மட்டும் தான் கவர்ந்தது என்ற நிலையில், தற்போது ரசிகர்கள் தங்களது வளர்ப்பு நாய்க்கும் ஜானு கெட்டப் போட்டு அசத்துகின்றனர்.
#Jaanuthepuppy ?? #96thefilm pic.twitter.com/5IZA1lXHLp
— Trish Krish (@trishtrashers) November 6, 2018
அப்படி, ரசிகர் ஒருவர் தனது நாயை ஜானுவாக மாற்றிய புகைப்படத்தை நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்துக்கு த்ரிஷா ரசிகர்களும், ஜானு ஃபேன்ஸும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.