நானா பட்டேகர் மீதான பாலியல் குற்றம் சுமத்திய தனுஸ்ரீ கார் சூறையாடல் வீடியோ!
பாலிவுட் நடிகர் நானா பட்டேகர் மீது நடிகை தனுஸ்ரீ பாலியல் புகார் தெரிவித்துள்ள நிலையில், தனுஸ்ரீயின் கார் குண்டர்களால் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை: பாலிவுட் நடிகர் நானா பட்டேகர் மீது நடிகை தனுஸ்ரீ பாலியல் புகார் தெரிவித்துள்ள நிலையில், தனுஸ்ரீயின் கார் குண்டர்களால் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டில் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாட தனுஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த பாடல் ஷூட்டிங்கின் போது, நானா படேகர் தன்னிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாக தனுஸ்ரீ பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
பாலிவுட் திரையுலகில் பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தில் தனுஸ்ரீக்கு ஆதரவாக பிரியங்கா சோப்ரா, ஃபரான் அக்தர், பர்கா தத், பரீனித்தி சோப்ரா, ட்விங்கிள் கண்ணா, ரிச்சா சத்தா, ஹன்சல் மேத்தா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு பாடல் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு படத்தில் இருந்து வெளியேறிய தனுஸ்ரீயை நானா பட்டேகர் குண்டர்களை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அந்த மிரட்டலின் போது தனுஸ்ரீயின் கார் அடித்து நொறுக்கப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சுமார் 10-க்கும் மேற்பட்டோர் தனுஸ்ரீயின் காரை சூழ்ந்துக் கொண்டு அவரது காரை சேதப்படுத்தும் காட்சிகள் உள்ளன. இது தொடர்பாக அப்போதே நடிகர் சங்கத்தில் தனுஸ்ரீ புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகள் கழித்து இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
MNS party in an interview given to a leading daily has threatened me with a violent attack. This on top of other threats issued to me from Nana’s side…I would like to thank Mumbai police force for coming forward to protect me & helping me strengthen my resolve: Tanushree Dutta pic.twitter.com/Sk3k1eddJA
— ANI (@ANI) October 2, 2018
தன் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டை சுமத்துவதாகக் கூறி தனுஸ்ரீயின் புகார்களை மறுத்த நானா பட்டேகர், தனுஸ்ரீ பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அப்படி எந்த நோட்டீஸும் பெறவில்லை என்று தனுஸ்ரீ தரப்பு மறுத்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகள் மூலம் நானா பட்டேகர் தன்னை மிரட்டுவதாக புதிய புகார் ஒன்றை தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.