தோனி தலயா? அப்போ அஜித் யாருய்யா? கார்த்திக் சுப்புராஜை வச்சு செய்யும் அஜித் ரசிகர்கள்!
தோனியை தல என்று குறிப்பிட்டுப் பதிவிட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை அஜித் ரசிகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்
சென்னை: தோனியை தல என்று குறிப்பிட்டுப் பதிவிட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை அஜித் ரசிகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்
தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று சன் டிவியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரஜினியின் பேட்ட திரைப்படம் ஒளிபரப்பானது. அதே சமயம் ஜீ தொலைக்காட்சியிலும் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவான ரஜினியின் 2.0 திரைப்படம் திரையிடப்பட்டது.
இது ஒருபுறமிருக்க நேற்று ஐபிஎல் போட்டியில் சென்னை அணி – கொல்கத்தா அணிகள் மோதின. மாலை 4 மணியளவில் தொடங்கிய போட்டியானது, இரவு 7.30 மணி வரை சென்றது. இதனால் ரசிகர்கள் தலைவரின் பேட்டயை பார்ப்பதா? அல்லது சிஎஸ்கேவின் ஆட்டத்தைப் பார்ப்பதா? என்று குழப்பி போயிருந்தனர்.
இந்நிலையில் இது தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நம் தொலைக்காட்சிகளில் ஒரே நேரத்தில் தலைவர் மற்றும் தல ஆட்டம் என்று பேட்ட மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸை குறிப்பிட்டு பதிவிட்டார்.
Thalaivar and Thala ஆட்டம் playing in our televisions at the same time ?#Thalaivar & #ThalaDhoni legends forever ?#PettaOnSunTv #Petta #CSKvKKR #WhistlePodu
— karthik subbaraj (@karthiksubbaraj) April 14, 2019
தமிழ் சினிமாவில் தல என்றாலே, அது அஜித் தான். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் தல என்று தோனியை குறிப்பிட்டதால் கடுப்பான அஜித் ரசிகர்கள், ‘தல தோனியா ???இவருக்கு தோனி மேல எல்லாம் அக்கறை கிடையாது,எங்க தல மேல காண்டு. அடிச்ச அடி அப்படி’ என்று கார்த்திக் சுப்புராஜை வறுத்தெடுத்து வருகின்றனர்.
Dei TV la thaana ooduthu… theatre la oodura maari scene ah pottutu gunda
— Aravind Namasi (@AravindNamasi) April 14, 2019
தலயால் ஒருத்தர் வாழ்ந்தார் என்பது தான் சரித்திரம் வீழ்ந்தார் என்று சரித்திரமே இல்லை அடுத்து தல @karthiksubbaraj உனக்கு பட வாய்ப்பு கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை அதான் எங்க தல ❤️?
வாழு வாழ விடு ? #ThalaAjith
— தல ரமேஷ் (@FreekyBoy_143) April 15, 2019
இது ஒருபுறமிருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களோ, கார்த்திக் சுப்புராஜ் டிவீட்க்கு ஆதரவாகக் கருத்து கூறியுள்ளனர்.
இதையும் வாசிக்க: என்னுடன் உறவு வைத்து கொள்: கணவரின் நண்பரை கொலை செய்த இளம்பெண்!