தேர்தலை நிப்பாட்டலேன்னா தோத்துடுவோம், ஓட்டு போடாம அடிச்சு விரட்டணும் – பகீர் பிளான்

 

தேர்தலை நிப்பாட்டலேன்னா தோத்துடுவோம், ஓட்டு போடாம அடிச்சு விரட்டணும் – பகீர் பிளான்

சங்கரதாஸ் அணிக்கு ஒண்ணு சொல்றேன், தேர்தலை நிப்பாட்டலைன்னா நம்ம அணி தோத்துடும், தேர்தலை நிப்பாட்டுறதுக்கு என்ன வழியோ அதைச் செய்யணும். தேர்தலை நாளைக்கு நிப்பாட்டணும், யாரும் ஓட்டு போடக்கூடாது, அடிச்சு விரட்டணும்

நடிகர் சங்க தேர்தலில் தபால் ஓட்டு பதிவு செய்யும் 1,045 பேரை தவிர்த்து, மீதமுள்ள 2,132 உறுப்பினர்கள் சென்னை மைலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு, ஆளுநர் சந்திப்பு, அதனை எதிர்த்து நீதிமன்ற இடைக்காலத் தடை என பல டிவ்ஸ்ட்களைக் கண்டு இன்று தேர்தல் களம் காண்கிறது நடிகர் சங்கம். ஆனால், ஏதோ ஒரு சக்தி நடிகர் சங்க தேர்தலை நிறுத்திவிடவேண்டும் என்பதில் குறியாக இருப்பது வெளிப்படை.

Bhagyaraj Team

எதேச்சையாக நேற்று ஒரு வாட்சப் குரூப்பில் நிகழ்ந்த ஒரு உரையாடல் நமது கவனத்துக்கு வந்தது. நாசர் அணியில் இருக்கும் முக்கிய இளம் கதாநாயகனை அறிமுகம் செய்த இயக்குநர் குரல்போல் இருக்கும் அந்தக்குரல் சொல்லும் விஷயம் அவ்வளவும் பகீர் ரகம்.

Vishal team

அக்குரல் சொல்லக்கேட்டது இதுதான், “சங்கரதாஸ் அணிக்கு ஒண்ணு சொல்றேன், தேர்தலை நிப்பாட்டலைன்னா நம்ம அணி தோத்துடும், தேர்தலை நிப்பாட்டுறதுக்கு என்ன வழியோ அதைச் செய்யணும். அதைச் செய்யாம சும்மா ‘நான் அங்க ரூம் போட்டுருக்கேன், இங்க ரூம் போட்டுருக்கேன், நான் ஓட்டு போட்டுருவேன்னா வேலைக்கு ஆகாது. தேர்தலை நாளைக்கு நிப்பாட்டணும்,  யாரும் ஓட்டு போடக்கூடாது, அடிச்சு விரட்டணும், இதுக்கு நாம தயாரா இருக்கணும், அதுக்கு ஓக்கேன்னா நாம பண்ணிக்கலாம்”. ஏதோ பெரிதாக சம்பவம் செய்யவிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.  நடிகர் சங்க தேர்தல் வன்முறை பாதையை தேர்ந்தெடுக்கலாம் என்பதால்தான், 400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருகிறார்கள். காத்திருப்போம்!