‘தளபதி 63’ படத்தில் இவரும் நடிக்கிறார்; சற்றுமுன் வெளியான அடுத்த அப்டேட்!
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில், நடிகர் விவேக்கும் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை: அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில், நடிகர் விவேக்கும் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 21-ம் தேதி தொடங்க இருக்கிறது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் யோகி பாபுவும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.
We would like to welcome comedy king @Actor_Vivek officially onboard #THALAPATHY63! pic.twitter.com/K5ZKV0whBL
— AGS Entertainment (@Ags_production) January 14, 2019
இந்நிலையில், நடிகர் விவேக்கும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யுடன் விவேக் இணைய இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.