தளபதி 63 அப்டேட்: ஸ்டூடியோல யாரு இருக்காங்க பாருங்களேன்.. ! ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்
தளபதி 63 அப்டேட் கொடுக்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார்.
சென்னை: தளபதி 63 அப்டேட் கொடுக்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துவரும் இப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுயடைந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான இந்த மாதம் 22ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. மேலும் படத்தின் அப்டேட் விடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று ‘தளபதி 63’ அப்டேட் கொடுக்கும் விதத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘படத்தின் இரண்டு பாடல்களின் எடிட்டிங் பணி முடிந்துவிட்டது. அந்த இரண்டு பாடல்களையும் முதல்முதலில் பார்த்தது நான் தான் என்ற பெருமையும் எனக்கு இருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.
Look who is here ?I am the first to see … edit of two songs ??? pic.twitter.com/obUmUvQ94z
— A.R.Rahman (@arrahman) June 4, 2019
அதோடு அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் இயக்குநர் அட்லியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.